இன்று கொல்கத்தாவில் இரவு 7:30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது, நேற்று குஜராத் டைட்டன்ஸ் இறுதிக்கு முன்னேறியது, எனவே இந்தப் போட்டியில் ஆர்சிபி வென்றாலும் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோதிதான் இறுதி வாய்ப்பைப் பெற வேண்டும், மாறாக இந்தப் போட்டியில் தோற்கும் அணி வெளியேற வேண்டியதுதான்.
லக்னோ பேட்டிங் கேஎல்.ராகுலை நம்பியே உள்ளது, இந்த ஐபிஎல் தொடரில் அவர் 537 ரன்களை 48.8 சராசரியில் எடுத்துள்ளார். குவிண்டன் டி காக் 502 ரன்கள். தீபக் ஹூடா 406 ரன்கள். இவர்கள்தான் மேஜர் பங்களிப்பார்கள், மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து 789 ரன்களையே எடுத்துள்ளதாக கிரிக் இன்போ புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்த பலவீனம் இருந்தும் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஏன் எனில் லக்னோவின் பவுலிங், மோசின் கான், ஜேசன் ஹோல்டர், ஆவேஷ் கான், துஷ்மந்த சமீரா, ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னாய் ஆகியோர்களே.
மாறாக ஆர்சிபி அணிக்கு பெரிய பின்னடைவு ஹர்ஷல் படேல் காயம்தான், அவர் ஆட முடியவில்லை எனில் ஆகாஷ்தீப் ஆடுவார் இவரை நம்ப முடியாது.
மாறாக ஆர்சிபி பேட்டிங் கோலியின் புத்துணர்ச்சி பெற்ற அரைசதத்தின் மூலம் வலுவாக உள்ளது, கிளென் மேக்ஸ்வெல், டுபிளெசிஸ், ரஜத் படிதார். எல்லாவற்றுக்கும் மேலாக காத்துக் கொண்டிருக்கும் தினேஷ் கார்த்திக். ஷாபாஸ் அகமட் எனும் ஆல்ரவுண்டர் கூடுதல் பலம், பவுலிங்கில் ஜோஷ் ஹேசில்வுட் எந்த நேரத்திலும் அபாயகரமான பவுலர். எனவே ஒர் அருமையான போட்டி காத்திருக்கிறது.
ஆர்சிபி உத்தேச 11 : டுபிளெசிஸ், விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது,வைனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் அல்லது ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: டி காக், ராகுல், ஹூடா, குருணால் பாண்டியா, ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜேசன் ஹோல்டர், ஆவேஷ் கான், சமீரா, மோசின் கான், ரவி பிஷ்னோய்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.