ipl 2022 lucknow defeat kolkata by 2 runs | பேட்டிங்கில் மாஸ் காட்டிய டிகாக்-ராகுல்: இறுதி ஓவர் வரை டஃப் கொடுத்த கொல்கத்தா

Share

ஐ.பி.எல் 2022 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டியின் இறுதிக் கட்டப் போட்டிகளில் அணிகள் விளையாடிவருகின்றன. இன்றையப் போட்டியில் கொல்கத்தாவும், லக்னோ அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், குயின் டன் டிகாக் களமிறங்கினர்.

இருவரும் இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் டிகாக் அதிரடியாக ஆட மறுபுறம் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார். இருவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாப்புறம் சிதறடித்தனர். ராகுலையும், டிகாக்கையும் ஆட்டமிழக்க செய்ய முயன்ற கொல்கத்தா அணி வீரர்களின் முயற்சி இறுதிவரை பயனளிக்காமல் போனது. ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் லக்னோ அணி 210 ரன்களைக் குவித்தது. 70 பந்துகளை எதிர்கொண்ட டிகாக் 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 140 ரன்களைக் குவித்தார்.

மறுபுறம் கே.எல்.ராகுல் 51 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு கொல்கத்தா வீரர்கள் களமறிங்கினர். ஆனால், தொடக்கமே கொல்கத்தாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காத நிலையில் வெங்கடேஷ் ஐயர் மோஹ்சின் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அபிஜீத் தோமர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா 9 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து, ஜோடி சேர்ந்த நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர்.

அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியா ஆடிய ராணா 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயார் ஐயர் 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா 4 விக்கெட்டுகளை இழக்கும்போது 131 ரன்களைக் குவித்தது. அவரைத் தொடர்ந்து சாம் பில்லிங்ஸும் 36 ரன்கள் எடுத்தார். இறுதி நேரத்தில் ரிங்கு சிங், சுனில் நரேன் அதிரடியாக ஆடி கொல்கத்தா அணியை வெற்றியை நோக்கி பயணிக்கச் செய்தனர். இறுதி ஓவர் வரையில் பரபரப்பைக் கூட்டினர் கொல்கத்தா வீரர்கள். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 21 ரன்கள் எடுக்க வேண்டும் சூழல் இருந்தது.

மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் இறுதி ஓவரை வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங், முதல் பந்தில் பவுண்டரி, அடுத்த இரண்டு பந்துகளில் தொடர்ந்து சிக்ஸ் அடித்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். 3 பந்துகளில் ஐந்து ரன்கள் தேவை என்றிருந்த நிலையில் ரிங்கு சிங் 2 ரன்கள் எடுத்தார். 2 பந்துக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிங்கு சிங் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, உமேஷ் யாதவ் இறுதி பந்தில் களமிறங்கினர்.

இறுதி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் ஆட்டம் ட்ரா 3 ரன்கள் எடுத்தால் வெற்ற என்ற நிலையில் ஸ்டாய்னிஸ் யார்க்கர் பந்துவீசி உமேஷ் யாதவ்வை வீழ்த்தினார். அதன்மூலம் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்மூலம் குவாலிபயர் சுற்றி உறுதிப்படுத்தியது லக்னோ அணி.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com