நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், இந்த கேப்டன்ஷிப் மாற்றம் இன்று நடந்துள்ளது. 2008-ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த சீசன் வரையிலும் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பில் இருந்தார்.
தோனியின் தலைமையின் கீழ் சென்னை அணி, 2010, 2011, 2018, 2021 ஆகிய சீசன்களின்போது சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் உலக அளவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறை சிஎஸ்கே கைப்பற்றியுள்ளது.
இதையும் படிங்க – IPL 2022-கொல்கத்தா அணியில் ஏதோ சரியில்லை – விஷயத்தை உடைத்த பிளேயர்
இந்த நிலையில் நடப்பு சீசனில் அணியின் கேப்டனாக ரவிந்திரா ஜடேஜா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. சென்னை அணியின் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு மிகச் சரியான முடிவை அணி நிர்வாகமும், தோனியும் எடுத்ததாக சீசன் ஆரம்பிக்கப்பட்டபோது பாராட்டுக்கள் குவிந்தன.
மேலும், கேப்டன் பொறுப்புக்கு தகுதி வாய்ந்த நபராக ஜடேஜா இருந்து வந்தார். சென்னை அணிக்காக ஜடேஜா 8 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டராக அணிக்கு பலமுறை வெற்றியை தேடித்த தந்தவர் என பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டது விமர்சகர்கள் பார்வையிலும் சரியாகவே பார்க்கப்பட்டது.
📢 Official announcement!
Read More: 👇#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022
நடப்பு சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி மொத்தமே 2 மேட்சுகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் 9வது இடத்தில் உள்ளது. 10வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.
லீக் சுற்றில் இன்னும் 10 போட்டிகள் மீதம் உள்ள நிலையில், சிறப்பாக விளையாடினால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அதிக வாய்ப்புகள் சென்னை அணிக்கு உள்ளன. இந்த நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அதனை ஜடேஜா தோனியிடம் ஒப்படைத்துள்ளார். ஜடேஜாவின் முடிவை ஏற்று, தோனி கேப்டன் பொறுப்பை கையில் எடுத்திருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.