IPL 2022: Ishan Kishan bought for Rs 15.25 crore, says even legends like Chris Gayle struggle, கிறிஸ் கெய்லே திணறினாரு…

Share

ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலத்தில் பெரிய தொகையான ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த இஷான் கிஷன் ஒரு ஹைப், அவருக்கு ஒன்றும் வரவில்லை என்று இந்தத் தொடரில் நிரூபணம் ஆனதையடுத்து அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பப் பட்ட போது  ‘என்ன சார் இது? பெரிய பெரிய பிளேயர்களெல்லாம் திணறியிருக்காங்க, என்னைப் போய் சொல்றீங்களே என்ற தொனியில் பதிலளித்தார்.

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2022 இல் இதுவரை 13 போட்டிகளில் 10 ஆட்டங்களில் தோல்வியடைந்து படுமோசமான தொடரைச் சந்தித்துள்ளது. செவ்வாயன்று வான்கடே மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் மூன்று ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 10வது இடத்தில் முடியாமல் இருக்க வேண்டும் என்ற அதன் கனவும் நிறைவேறாது.

அவர்களின் போராட்டத்திற்கு ஒரு முக்கிய காரணம், அவர்களின் தொடக்க பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானின் மோசமான பேட்டிங்கே.  செவ்வாயன்று  சன் ரைசர்சுக்கு எதிராக 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போதிலும், ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 15.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கிஷன் 13 போட்டிகளில் 30.83 சராசரியில் 370 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 3 அரைசதங்கள்தான் அவரால் எடுக்க முடிந்தது.

ஆச்சா போச்சா என்றார்கள் ஆனால் பாவம்! இஷான் கிஷன் ஒரு தொடைநடுங்கி வீரர் என்பது உம்ரன் மாலிக்கை அவர் சந்திக்கும் போது தெரிந்தது, பந்து தானாகவே மட்டையில் பட்டு சிக்ஸ் போனது, இன்னொரு முனையில் தன் குருநாதர் ரோஹித்சர்மாவின் ஹெல்மெட்டை உம்ரன் மாலிக் பதம் பார்த்தார். இதைப் பார்த்தோ என்னவோ இவரும் தொடை நடுங்கி விட்டார்.

இந்நிலையில் தன் பார்ம் குறித்து கூறும் போது தன்னை கிறிஸ் கெய்ல் போன்ற சாதனையாளர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது என்ற குறைந்தபட்ச கூச்சம் கூட இல்லாமல், “பெரிய வீரர்களெல்லாம் திணறுவதைப் பார்த்திருக்கிறேன். கிறிஸ் கெய்ல் போன்ற வீரர்களே நேரம் எடுத்துதான் அடிக்க முடிந்ததை பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள், ஒவ்வொரு போட்டியும் புதியது. சில நாள் நல்ல முறையில் தொடக்கம் கிடைக்கும், சில நாள், எதிரணி பந்துவீச்சாளர்கள் தயாராக வந்து  நல்ல இடங்களில் பந்துகளை வீசுவார்கள்.டிரஸ்ஸிங் ரூமுக்குள் இருக்கும் திட்டமிடல் வெளியில் இருப்பவர்கள் விரும்புவது போல் இருக்காது.

கிரிக்கெட்டில் ஒரே ரோல் அதாவது இறங்கு அடி என்பதாக எப்போதும் இருக்காது, எனக்கென்று ரோல்கள் மாறும் சூழ்நிலைக்கேற்றார்போல் தான் ஆட முடியும்.

அணியாக யோசித்தால் அப்படித்தான் ஆட முடியும். எதிரணியினர் நன்றாக வீசும்போத் மரியாதை கொடுத்துத்தான் ஆட வேண்டியிருக்கும். விக்கெட்டைப் பாதுகாத்தால் பின்னால் வருபவர்களுக்கு எளிதாக இருக்கும். சில நாட்களில் டார்கெட் பெரியதாக இருக்கும் போது எல்லா பந்துகளையும் அடித்து ஆட வேண்டியிருக்கும் எனவே ஒரே ரோல் கிடையாது.

இவ்வாறு கூறியுள்ளார் இஷான் கிஷன்.  “எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com