அவரைத் தொடர்ந்து, 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். லோம்ரோர் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களைக் குவித்தது. அதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ், டீவோன் கான்வே களமிறங்கினர்.
ரூத்ராஜ் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய உத்தப்பா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அம்பதி ராயுடுவும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் மொயின் அலி நிதானமாக ஆடி ரன்கள் எடுக்க மறுபுறம் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது சென்னை அணி. ஜடேஜா 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, மொயின் அலியும் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தோனியின் ஆட்டத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.