IPL 2022: பட்லர் அதிரடி சதம் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.. வெளியேறியது பெங்களூரு அணி

Share

ஐபிஎல் பிளோ ஆஃப் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதலாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதை தொடர்ந்து நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி 2வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி நேற்று இரவு நடைபெற்ற 2வது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  டூப்ளசிஸ் – விராத் கோலி இணை தொடக்க ஜோடியாக களமிறங்கியது.  கடந்த ஆட்டத்தில் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த விராத் கோலி இந்த முறை ஒரு சிக்ஸர் அடித்து 7 ரன்களே ஆட்டமிழந்து வெளியேறினார். இதை தொடர்ந்து, கடந்த போட்டியில் சதம் அடித்த ரஜத் படிதார் டூ பிளசிஸ் உடன் இணைந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த பெங்களூரு அணி , 2வது விக்கெட்டை 79 ரன்களுக்கு இழந்தது. டூ பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

சிறப்பாக விளையாடிய படிதார் அரை சதம் அடித்தார். 58 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்க்கு 130 ஆக இருந்தது. பின்னர் வந்த விளையாட்டு வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 20 ஓவர் முடிவுக்கு 8 விக்கெட்களை இழந்து 157 ரன்களை எடுத்தது.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் பெயர் வரலாற்று பக்கங்களில் பொறிக்கப்படும் – சேவாக் எதிர்பார்ப்பு

158 ரன்களை எடுத்தால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாட தொடங்கியது. ஜாஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் ஜோடி தனது அதிரடி ஆட்டம் மூலம் வெற்றியை நோக்கி அணியை வழிநடத்தி சென்றது. ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும் கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், ஜாஸ் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தை விடாமல் தொடர்ந்தார். 18.1 ஓவர்களில் அந்த அணி வெற்றி இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பட்லர் 60 பந்துகளில்  106 ரன்களை எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன.  ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இதுவரை இரண்டு முறை மோதியுள்ளன. இரண்டிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com