IPL: ஸ்பான்ஸ்ர்ஷிப் டு டெலிகாஸ்ட்… அணிகள் வருமானம் ஈட்டுவது எப்படி? – ஐ.பி.எஸ் பிசினஸ் தெரியுமா?

Share

ஒவ்வொரு அணியின் உரிமையையும் அதன் உரிமையாளர்கள் ஏலத்தின் மூலம் வென்றே பெற்றிருக்கின்றனர். அதன்படி, 2008 இல் இருந்த 8 அணிகளையும் அதன் உரிமையாளர்கள் வாங்கிய தொகை,

மும்பை இந்தியன்ஸ் – 447.6 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 446 கோடி

டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் – 428 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் – 364 கோடி

டெல்லி கேப்பிட்டல்ஸ் – 336 கோடி

பஞ்சாப் கிங்ஸ் – 304 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 300 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் – 268 கோடி

ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே கூடுதலாக இரண்டு அணிகள் ஐ.பி.எல் இல் சேர்க்கப்பட்டது. அந்த அணிகளுக்கான உரிமைத்தொகையை கேட்டாலே ஐ.பி.எல் ஆரம்பக்கட்டத்திலேயே எப்பேர்ப்பட்ட வளர்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கியது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

Kochi Tuskers Kerala squad

Kochi Tuskers Kerala squad

கொச்சி டஸ்கர்ஸ் என்ற அணியை ரூ.1533 கோடிக்கும், புனே வாரியர்ஸ் என்கிற அணியை, ரூ.1702 கோடிக்கும் பிசிசிஐ விற்றிருந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே பொருளாதார காரணங்களால் இந்த அணிகள் ஐ.பி.எல் லிலிருந்து நீக்கப்பட்டன. 2022 சீசனுக்கு முன்பாக மீண்டும் புதிதாக இரண்டு அணிகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.

அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையை, ரூ.5652 கோடிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையை ரூ.7090 கோடிக்கும் பிசிசிஐ விற்றிருந்தது. 2008 இல் விற்கப்பட்ட மும்பை அணியின் உரிமையை விட லக்னோ அணியின் உரிமை கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம். சீசனுக்கு சீசன் ஐ.பி.எல் எந்தளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவுமே ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com