ஷ்ரேயாஸூம் நல்ல முறை ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார். 46வது ஓவரில் ஷ்ரேயாஸ் அவுட். கே.எல்.ராகுல் 7 ரன் எடுத்தநிலையில் குமாரா பந்தில் அட்டமிழந்தார். சூர்யகுமாரும் 4 ரன்னிற்கு வெளியேறினார். 50 வது ஓவர், குமாராவின் முதல் பந்தை கோலி, சிக்ஸர் அடிக்க 150 ரன்களைக் கடந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் 390/5 என எடுத்து, இலங்கைக்கு 391 ரன்னை இலக்காக நிர்ணயித்தது, இந்திய அணி.
இலங்கை அணியில் நுவனிது – அவிஷ்கா இணை பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால், தொடங்கிய வேகத்தில் முடிந்தும் விட்டது என்பதே நிதர்சனம். 11 வீரர்களில், போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அசன் பந்தரா விளையாட இயலவில்லை. ஏனைய 10 வீரர்கள், கையிருப்பு 9 விக்கெட்டுடன் இலங்கை ஆடியது. இலங்கைக்கு இதிலும் இன்னல்தான். நுவனிது, ஷனாகா, ரஜிதா ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். 22 ஓவர் முடிவிலேயே 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டும் இழந்து, இலங்கை ஆல்-அவுட் ஆனது.
ஆனால், இதில் இந்திய பந்துவீச்சை பாராட்டியே ஆகவேண்டும். இதில் அக்ஷர்,வாஷிங்டன் சுந்தர் பந்து வீசவே இல்லை. ஷமி, குல்தீப், சிராஜ் மற்றும் ஷ்ரேயாஸ் (ஒரு ஓவர்) ஆகியோர் மட்டுமே பந்து வீசினர். இதில் முகம்மது சிராஜ் நிச்சயம்
பாராட்டுதலுக்குரியவர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அது மட்டுமின்றி கருணரத்னேவை ஆகச்சிறந்த முறையில் ரன் அவுட் ஆக்கியிருந்தார். சிராஜ் நல்ல ஆல்-ரவுண்டராக, திறம்பட செயல்பட்டு வருகிறார். எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் .
இந்தியா 3-0 என்ற கணக்கில் இத்தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது !
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.