INDvsAUS : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; வெறித்தன கம்பேக் கொடுத்த கே.எல்.ராகுல்! |India Vs Australia 1st ODI Match Report

Share

கடந்த சில மாதங்களாகவே கே.எல்.ராகுலின் ஆட்டத்திறன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த விமர்சனங்களையெல்லாம் நேற்று உடைத்தெறிந்திருக்கிறார் கே எல் ராகுல். அதேபோல காயம் காரணமாக 8 மாத மாதத்திற்கு பிறகு தனது 300 வது சர்வதேச போட்டியில் களம் இறங்கி 45* ரன்கள் குவித்து 2 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார் ஜடேஜா. கே.எல்.ராகுல் – ஜடேஜா இணைதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய சொன்னது. ட்ராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்து மிட்செல் மார்ஷ் ஓபனிங் செய்தார். ஐசிசி நம்பர் ஒன் பௌலர் முகமது சிராஜிடம் முதல் ஓவரிலேயே 5 ரன்களில் ஹெட் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க, மீண்டும் விக்கெட் விடாமல் பவர் ப்ளேவை சரியாக பயன்படுத்தி பவுண்டரிகளை விளாசி ரன்களை குவித்தார் மிட்செல் மார்ஷ். ஸ்மித்தும் தன் பங்குக்கு பவர் ப்ளேயில் பவுண்டரிகளின் அடித்திருந்தார். பவர்ப்ளே முடிவில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வகித்து 59 ரன்கள் எடுத்திருந்தனர் மிட்செல் மார்ஷ் – ஸ்மித் கூட்டணி.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com