INDvNZ : 0,0,0,0,0 – 5 வீரர்கள் டக்; சுதாரிக்காத ரோஹித்; கோலி – பெங்களூருவில் தடுமாறும் இந்தியா | Ind Vs Nz First Session Report

Share

ரோஹித்தான் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்திருந்தார். இந்த முடிவே கொஞ்சம் விமர்சிக்கப்பட்டது. நேற்று முழுவதும் மழை பெய்திருக்கிறது. இன்றும் மழைக்கான சூழல் இருக்கிறது. அப்படியிருக்க பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான அம்சங்கள் வெளிப்படக்கூடும். அதனால் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்திருக்கலாம் என விமர்சிக்கப்பட்டது. அதற்கேற்றார் போலத்தான் இந்தியாவின் தொடக்கமும் இருந்தது. டிம் சவுதி, மேட் ஹென்றி, வில்லியம் ரூர்கி என நியூசிலாந்தின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் பந்தை உள்ளும் வெளியுமாக திருப்பி திணறடித்தனர். சவுதி வீசிய முதல் ஓவரிலேயே புதிய பந்தில் கோலோச்ச போகிறார்கள் என்பது தெரிய வந்துவிட்டது. ஆனாலும், இந்திய பேட்டர்கள் சுதாரித்துக் கொள்ளவே இல்லை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com