Indian Men Hockey Team Lost To Australia In CWG And Won Silver

Share

காமன்வெல்த் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா ஹாக்கியில் பெறும் இரண்டாவது பதக்கம் இது. இதற்கு முன்பாக பெண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

காமன்வெல்த் ஆண்கள் ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியினரைத் தொடர்ந்து தடுப்பாட்டம் ஆடும் நிலைக்கு தள்ளினர்.

முதல் குவார்ட்டரிலேயே 2 கோல்களை அடித்த ஆஸ்திரேலியா அணி மிக வலுவாக இருந்தது. முதல் குவார்ட்டர் முடிவில் ஸ்கோர் 2-0 என்ற கணக்கிலேயே இருந்தது. இரண்டாவது குவார்ட்டரில் இந்திய அணி சிறிது நேரம் பந்தை தன் வசம் வைத்திருந்தாலும் ஆஸ்திரேலியாவின் தடுப்பை ஊடுருவ முடியவில்லை.

இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணி வீரர்கள்.

சிறிது நேரத்தில் பந்தைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து பெனால்டி கார்னர்களை பெற்றது. முதல் முயற்சியை இந்தியா கோலாக்காமல் தடுத்தாலும் இரண்டாவது பெனால்டி கார்னர் கோலாகியது.

அதன் பின்பு இந்தியாவின் அகாஷ்தீப் ஒரு கோல் அடிக்க முயற்சி செய்தாலும் அது ஆஸ்திரேலியாவால் தடுக்கப்பட்டது. அதன் பின்பு தொடர்ந்து கோல் மேல் கோல் அடித்து 7-0 என்ற கணக்கில் ஆட்டத்தை முடித்து இந்தியாவை ஆஸ்திரேலியா நசுக்கியது.

இதன் மூலம் காமன்வெல்த்தில் ஆஸ்திரேலியா தங்கப்பதக்கத்தையும், இந்தியா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது. காமன்வெல்த் ஹாக்கியில் ஆஸ்திரேலியா தங்கப்பதக்கம் வெல்வது இது ஏழாவது முறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com