இந்த ஒப்பந்தம் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கான பயிற்சியாளர் என்று முன்னர் குறிப்பிட்டிருந்த நிலையில், அது பயிற்சியாளர் அல்ல ஜோதிட நிறுவனம் என்று தற்போது அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கோல்கீப்பர் டனுமாய் போஸ் கூறுகையில் “சரியான நேரத்தில், முறையான பயிற்சி அளிக்காமல் பல போட்டிகளில் தோல்வியைத் தழுவ காரணமே இந்த அமைப்புதான். தற்போது வெற்றி பெறுவதற்காக ஒரு ஜோதிட அமைப்பை இவர்கள் அழைத்து வந்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் கால்பந்துத் துறை ஒரு அவலமான பாதையை நோக்கிச் சென்றுக்கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது. இந்த பணத்தை வைத்து வீரர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஸ்பான்சர் செய்திருக்கலாம். இது குறித்து நிர்வாக அமைப்பு முறையான விசாரனை நடத்தி இன்னும் வெளியில் வராத பல குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.