சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு போடப்பட்ட பிட்ச் படுமோசம், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரன் கடுமையாக பிட்ச்களை விமர்சனம் செய்தார். இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, ராகுலுக்கு கோவிட்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 6 தோல்விகளை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சந்தித்துள்ளது. இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் படுமோசமாகவே ஆடிவருகிறது. கேப்டன் நிகலஸ் பூரனும் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை முதலில் 50 ஒவர்களை ஆடுங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜனவரி 2021 முதல் வெஸ்ட் இண்டீஸ் 12 ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்துள்ளது. இதில் 9 முறை 50 ஓவர்கள் தாங்கவில்லை என்பதால்தான் பூரனும் சிம்மன்ஸும் இப்படிக் கூறுகின்றனர். மே.இ.தீவுகளுக்கு நற்செய்தியாக ஜேசன் ஹோல்டர் அணிக்கு வந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகலஸ் பூரன் இந்தியாவுக்கு எதிராக 9 போட்டிகளில் 354 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 44.25. ஸ்ட்ரைக் ரேட் 107.
மாறாக இந்திய கேப்டன் ஷிகர் தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சொதப்பி வருகிறார், கடைசி 5 போட்டிகளில் 112 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
இந்திய லெவன்: ஷிகர் தவான், ருதுராஜ் அல்லது இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான் / பிரசித் கிருஷ்ணா, செஹல், சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி: ஷேய் ஹோப், பிரண்டன் கிங், ஷம்ரா புரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் போவெல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஜாரி ஜோசப், குதாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.