India vs West Indies – 16 years since west indies not yet won a odi series against India , 2006-ம் ஆண்டோடு சரி! இந்திய அணியின் புதிய சாதனை – News18 Tamil

Share

கடைசியாக 2006 ஆம் ஆண்டு பிரையன் லாரா தலைமையில் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தியது. அதன் பிறகு அவர்கள் இப்போது வரை இந்திய அணியை வீழ்த்தவில்லை. தொடர்ச்சியாக 12 தொடர்களை இழந்துள்ளது மேற்கிந்திய தீவுகள். 2006ல் 1 – 4 என்ற கணக்கில் தொடரை இழந்து இருந்தது இந்திய அணி.

அதன் பிறகு ஒருதொடரைக்கூட இழக்கவில்லை. ஒருநாள் தொடரில் ஒரு அணிக்கு எதிரான அதிக வெற்றியை பதிவு செய்திருந்த பாகிஸ்தான் சாதனையை முறியடித்து உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான 11 ஒருநாள் தொடர்களை பாகிஸ்தான் வென்று இருந்தது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 138 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 69 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் 63 போட்டிகளிலும் வெற்றி பெற்றன. ஆறு ஆட்டங்கள் டையில் அல்லது கைவிடப்பட்டு எந்த முடிவையும் தரவில்லை. மேலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் கீரன் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com