India – Pakistan : “பாகிஸ்தான் அதை நிறுத்தும்வரை நிரந்தர அமைதியே கிடையாது” – ஓவைசி சொல்வதென்ன? | AIMIM chief Asaduddin Owaisi tweet about india pakistan clash in terrorism issue

Share

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் (மே 7) நடத்தியது.

அடுத்த நாள் இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் நடத்த, இந்தியா அதை முறியடித்தது.

அதன்பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவிக்க, பிறகு இந்தியாவும் மோதலை நிறுத்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பிரதமர் மோடி - டொனால்ட் ட்ரம்ப்

பிரதமர் மோடி – டொனால்ட் ட்ரம்ப்

இருப்பினும், அந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரங்களிலேயே, இந்திய பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாகத் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி-யுமான அசாதுதீன் ஓவைசி, “பாகிஸ்தான் தனது நாட்டை இந்தியாவுக்கெதிரான தீவிரவாதத்துக்குப் பயன்படுத்துவதை நிறுத்தும் வரை நிரந்தர அமைதி இருக்காது.

மோதல் நிறுத்தப்படுகிறதோ இல்லையோ, பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை நாம் விடக்கூடாது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com