அப்போது பேசிய அவர், ‘புதிய கேப்டனை அறிவிக்கும் போது, அடுத்த ஒரு தொடருக்கும் இரண்டு தொடருக்குமான கேப்டனை தேர்வு செய்ய முடியாது. நீண்ட கால அடிப்படையில்தான் யோசிக்க முடியும். அதன்படி,இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கில்லை அறிவிக்கிறோம். கில் இளம் வீரர். டி20 யிலும் கேப்டனாக நன்றாக செயல்பட்டிருக்கிறார்.
இது அதிக அழுத்தமிக்க பணிதான். ஆனாலும், எங்களின் தேர்வு சரியானதுதான் என கில் நிரூபிப்பார் என நம்புகிறோம். அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தெல்லாம் கில்லும் கம்பீரும் இணைந்து முடிவெடுப்பார்கள்.’ என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிஷப் பண்ட் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும், இந்திய அணியில் தமிழக வீரர்களான சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பிடித்திருக்கின்றனர்.