என்னதான் நிலையான தொடக்கம் என்றாலும் இந்த அணுகுமுறை பின்வரிசை வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். ரோஹித், ராகுல், கோலி மூவரும் இந்த பவர்ப்ளே விஷயத்தில் பிரத்யேக கவனம் செலுத்தியாக வேண்டும். மற்றபடி பேட்டிங்கில் இந்திய அணி படு ஜோராகவே இருக்கிறது.
வேகப்பந்துவீச்சும் ஒரு யுனிட்டாகவே சிறப்பாகவே இருக்கிறது. நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளில் மட்டும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் மூவருமே தங்களின் பெஸ்ட்டை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற மைதானம் இது. அதேநேரத்தில், அது அத்தனை எளிதாகவும் நடந்துவிடாது. தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்குமே பயங்கரமாக இருக்கிறது. டீகாக் பேட்டை சுழற்றினாலே பவுண்டரிதான் எனக் கடந்த இரண்டு போட்டியிலுமே கலக்கியிருக்கிறார். ரூஸ்ஸோ இந்த உலகக்கோப்பையின் முதல் சதத்தை அடித்திருக்கிறார். இவர்கள் போக எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர் என ஒரு பெரிய பேட்டிங் பட்டாளமே இருக்கிறது. இவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனில், இந்திய பௌலர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கத்தை கொடுத்தாக வேண்டும். டீகாக், ரூஸ்ஸோ போன்றோரை வீழ்த்த அஷ்வினுமே துருப்புச்சீட்டாக இருக்கக்கூடும்.
பந்துவீச்சிலும் ரபாடா, நார்க்கியா, பர்னல் என விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்களை வைத்திருக்கிறார்கள்.
இந்திய அணி இந்தப் போட்டியை வெல்லும்பட்சத்தில் பெரும் சவால்கள் அத்தனையையும் கடந்துவிடும். அரையிறுதிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பும் நிறையவே அதிகரிக்கும். ஏறக்குறைய தகுதிப்பெற்றுவிட்டது என்றே கூறிவிடலாம். தோற்கும்பட்சத்தில் இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேக்கு எதிராக வெல்ல வேண்டிய போட்டியில் மழையினால் வெறும் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்றிருந்தது. ஆக, அவர்களுமே இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என நினைக்கக்கூடும். தவறும்பட்சத்தில், பாகிஸ்தான் மீண்டு வந்து கடும் சவாலளிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
பெரும் சுவாரஸ்யத்தை அளிக்கப்போகும் ஒரு தரமான போட்டி நடைபெற இருக்கிறது. அதன் முடிவு எஞ்சியிருக்கும் போட்டிகளை மேலும் விறுவிறுப்பாகப் போகிறது.