IND vs SA: இந்தியா 349 ரன்கள் குவித்தபோதும் தென் ஆப்ரிக்கா இறுதியில் மிரட்டியது எப்படி?

Share

இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஒருநாள் தொடர்

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சதத்தால் 349 ரன்களைக் குவித்தது இந்திய அணி. இறுதி வரை போராடிய தென் ஆப்ரிக்கா 332 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகிய நிலையில் கே.எல். ராகுல் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்தார்.

முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரம்பத்திலே அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்த நிலையில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஒருநாள் தொடர்

பட மூலாதாரம், Getty Images

நிலைத்து நின்று ஆடிய கோலி – ரோஹித்

இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா உடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com