ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரின் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி முதல் நாளில் 235 ரன்களுக்கு சுருண்டது. இதில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முக்கிய பங்கு வகித்தார். இந்தப் போட்டியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளராக இடம் பிடித்தார்.

“டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக 5 விக்கெட் எடுப்பது மிகவும் ஸ்பெஷலானது. இப்போட்டியில் படைத்த சாதனை பற்றி எனக்குத் தெரியாது. விளையாடாத நேரங்களில் மட்டுமே நான் சாதனைகளைப் பற்றி பார்ப்பேன். அந்த விக்கெட்களை எடுத்தது நல்லது. வெயிலில் பந்து வீசுவது எளிதாக இல்லை. வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசினார். அனைவரும் தங்களுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்ததாக பேட்டிங் துறையில் நாங்கள் அணியாக சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs