IND vs BAN 3-வது டி20: சாம்ஸன் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் – இந்தியா இமாலய வெற்றி பெற்றது எப்படி?

Share

இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சதம் அடித்த மகிழ்ச்சியில் சாம்ஸன்

வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி இமாலய வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. கோலி, ரோகித் இல்லாத இந்தியாவின் இளம் படை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிகபட்ச ரன்னை பதிவு செய்து, அசாத்திய வெற்றியை வசப்படுத்தியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்ஸனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 297 ரன்களைக் குவித்தது. ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு சாம்ஸன் விருந்து படைத்தார். கேப்டன் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

சூர்யகுமார் முழு நேர டி20 கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி விளையாடிய இரு தொடர்களையும் அசத்தலாக வென்று கொடுத்திருக்கிறார்.

இந்தியா - வங்கதேசம்

இந்தியா டாஸ் வென்று பேட்டிங்

ஐதராபாத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்காக சஞ்சு சாம்ஸனும், அபிஷேக் சர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி விளாசிய நிலையில் ஹசன் சகிப் பந்துவீச்சில் புல் ஷாட் ஆட முற்பட்டு, மிட் விக்கெட் திசையில் மெகதி ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com