IND vs BAN | ஷுப்மன் கில் நம்பிக்கை ஆட்டம்: 2-ம் நாளில் இந்தியா 81 ரன்கள் சேர்ப்பு | India scored 81 runs agaist Bangladesh in 2day test

Share

சென்னை: இந்தியா – வங்கதேச அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 81 ரன்களைச் சேர்த்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 339 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் கிளம்பினார். அடுத்து வந்த விராட் கோலியும் – ஷுப்மன் கில்லும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் கோலி நிலைக்கவில்லை. 17 ரன்களில் விக்கெட்டானார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 81 ரன்களைச் சேர்த்துள்ளது. கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். இதன் மூலம் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com