IND vs BAN | விரைந்து ஆட்டமிழந்த ரோகித், கில், கோலி: ஜெய்ஸ்வால், பந்த் நம்பிக்கை | bangladesh dismissed Rohit Gill Kohli in haste Jaiswal Pant gave hope team india

Share

சென்னை: வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மதிய உணவு நேர இடைவேளையில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. வங்கதேச பவுலர் ஹசன் மஹமூத் அந்த அணிக்கு அபார தொடக்கம் கொடுத்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீசி வருகிறது.

இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் அளிக்கும் வகையில் சிவப்பு மண் ஆடுகளம் இந்தப் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ளது. வங்கதேசம் டாஸ் வென்ற சூழலில் அந்த அணியின் ஹசன் மஹமூத் அதை சாதகமாக்கி கொண்டார்.

ரோகித் சர்மா (6 ரன்கள்), ஷுப்மன் கில் (ரன் ஏதும் இல்லை), விராட் கோலி (6 ரன்கள்) ஆகியோரை ஹசன் மஹமூத் வெளியேற்றினார். அதன் பின்னர் சர்ப்ரைஸ் மூவாக ரிஷப் பந்த் களத்துக்கு வந்தார். ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் இணைந்து 54 ரன்கள் சேர்த்தனர்.

ஜெய்ஸ்வால், 62 பந்துகளில் 37 ரன்கள் எடுத்துள்ளார். பந்த், 44 பந்துகளில் 33 ரன்கள் எடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் 6 பவுண்டரியும், பந்த் 5 பவுண்டரியும் எடுத்துள்ளனர். இந்தியா உணவு நேர இடைவேளையின் போது 88 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் பந்த், 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டையும் ஹசன் மஹமூத் கைப்பற்றினார். தொடர்ந்து கே.எல்.ராகுல் பேட் செய்ய வந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com