ஹஸன் மஹ்முத் அசத்தல்:
நேற்றைய நாளில் வங்கதேச அணிக்காக சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்த ஹஸன் மஹ்முத் இன்று மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 5 விக்கெட் ஹாலை எடுத்தார். ரோஹித், கில், விராட், ரிஷப் பண்ட், பும்ரா என பெரிய விக்கெட்டுகளாக வீழ்த்தியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச வீரர் ஒருவர் இப்போதுதான் முதல் முறையாக இந்திய மண்ணில் 5 விக்கெட் ஹாலை எடுக்கிறார்.
ஹஸனுக்கு 24 வயதுதான் ஆகிறது. இந்தியாவுக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறார். தன்னுடைய முதல் சுற்றுப்பயணத்திலேயே அவர் இவ்வளவு சிறப்பாக ஆடியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் வைத்து வங்கதேசம் டெஸ்ட் தொடரை வென்றிருந்த போதும் ஹஸன் 5 விக்கெட் ஹால் ஒன்றை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.