IND vs BAN: அஸ்வினின் சதம், ஜடேஜாவின் பொறுப்பு இந்திய அணியை காப்பாற்றியது எப்படி?

Share

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங், வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பித்தது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது.

இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து அணியை நெருக்கடியில் தள்ளினர். நண்பகல் உணவு இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளையும், பிற்பகல் தேநீர் இடைவேளைக்குள் அடுத்த 3 விக்கெட்டுகள் என 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆட்டத்தின் போக்கைப் பார்த்தபோது, இந்திய அணி 200 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருண்டுவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஆபத்பாந்தனாக வந்த அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி இந்திய அணியை பாதாளத்திலிருந்து மீட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com