IND vs AUS: “ஸ்ரேயாஸ் விளையாடினால் நன்றாக இருந்திருக்கும்"- ஹர்திக் பாண்டியா

Share

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில்  தொடங்குகிறது.

ஹர்திக் பாண்டியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடைபெறும் முதல் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார்.  இதனிடையே இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான  ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்தப் போட்டியில்  பங்கேற்கவில்லை. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது  இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார். 

இது தொடர்பாக பேசிய அவர், “நானும் இதுபோன்ற நிலைமையை எல்லாம் சந்தித்திருக்கிறேன். நிச்சயமாக அவர் விரைவில்  மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் இல்லாதது  இந்திய அணிக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை அவர் மீண்டு வர சில நாட்கள் ஆனால் அதற்கு மாற்றை  சிந்திக்க வேண்டி இருக்கும்.” இவ்வாறு கூறியவர் மேலும், இன்று நடைபெறும் போட்டியில்  ஸ்ரேயாஸ் ஐயர் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com