IND vs AUS முதல் டெஸ்ட் நாள் 2: ஜெய்ஸ்வால், ராகுல் அபாரம்: இந்தியா 218 ரன்கள் முன்னிலை! | india scored 172 runs against australia in 2nd day test match

Share

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்புகளின்றி இந்திய அணி 172 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி, ஆஸ்திரேலியாவை விட 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் விளை​யாடு​வதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்​தில் வெள்ளிகிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்குள் சுருட்டியது இந்தியா. இதில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 1947-ல் சிட்னியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 107 ரன்களை சேர்த்தது. இது தான் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், தற்போது 104 ரன்கள் என்ற பின்தங்கிய சாதனையை படைத்துள்ளது ஆஸ்திரேலியா.

46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் ஓப்பனர்களாக களமிறங்கினர். முந்தைய இன்னிங்ஸில் விட்டதையும் சேர்த்து இந்த இன்னிங்ஸில் அற்புதமான விளையாடினர். மிகவும் நிதானமாக விளையாடி விக்கெட்டுகள் வீழாமல் பார்த்துக்கொண்டனர். 123 பந்துகளில் அரைசதம் எட்டினார் ஜெய்ஸ்வால். டெஸ்ட் போட்டிகளில் இது அவருடைய 9-வது அரைசதம். கே.எல்.ராகுல் 124 பந்துகளில் அரைசதம் கடந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். 57 ஓவர்கள் முடிவில் ஜெய்ஸ்வால் 90 ரன்களையும், கே.எல்.ராகுல் 62 ரன்களையும் சேர்த்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்களைச் சேர்த்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com