பிக் பாஸ் தாமரை செல்விக்கு வீடு கட்டி தரப்போகும் பிரபலம்.. குவியும் பாராட்டுக்கள்!
இந்த ரெசிபி வீடியோ, கோமதி கிச்சன்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. வீட்ல டைம் கிடைக்கும் நேரத்தில் பக்குவமாய் இந்த பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது யூஸ் செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், எண்ணெய்.
பல போராட்டங்களுக்கு பிறகு கல்யாணம்.. சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!
செய்முறை:
1. கடாயில் 1/2 கப் கடலை பருப்பு, 1/2 கப் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு சிறிதளவு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. இப்போது வறுத்த பொருட்களை ஆற வைக்க வேண்டும்.
4. இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
5. இப்போது சுவையான பருப்பு பொடி தயார். தேவைப்படும் போது இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையான சுவையில் இருக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.