ICC டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை… புதிய சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர்கள்…

Share

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்து ஆஸ்திரேலிய வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. 5 நாட்கள் நீடித்த இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலித்த ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச் சென்றது.

குறிப்பாக அந்த அணியின் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த நிலையில், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 903 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவன் ஸ்மித் 885 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 163 ரன்கள் எடுத்த டிராவிஸ் ஹெட் 884 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவ்வாறு ஒரே அணியை சேர்ந்த வீரர்கள் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களைப் பிடிப்பது, 39 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்திருப்பதாக ஐசிசி கூறியுள்ளது. 1984 ஆம் ஆண்டின்போது கோர்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லாய்டு, லேரி கோம்ஸ் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் முதல் 3 இடங்களை பிடித்திருந்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com