பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதின் விளைவால் HIV உள்ளிட்ட பால்வினைத் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த Sexually Transmitted Disease-ல் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் கவிதா கௌதம்…
“பாதுகாப்பற்ற உடலுறவுதான் பால்வினைத் தொற்று ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு, திருமணமாகாதவர்கள் கூட பாலுறவில் ஈடுபடுகின்றனர்.
மருத்துவ ரீதியில் இது சரி, தவறு என்று சொல்ல ஏதுமில்லை. பாலுறவு என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆணுறையைப் பயன்படுத்தி பாதுகாப்பாக உறவு கொள்ள வேண்டும் என்பதை மட்டும் மனதில் நிறுத்தினால் போதுமானது. பாதுகாப்பான உடலுறவுக்கு காண்டம் மட்டும்தான் நமக்கிருக்கும் உபகரணம். காண்டம் ஆண் – பெண் இருவருக்கும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.