how to turn maggi into a quick healthy meal

Share

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டக்கூடிய உணவாக மேகி நூடுல்ஸ் உள்ளது. இதனை தினந்தோறும் சமைத்துக் கொடுத்தால் கூட சாப்பிட சலிக்கவே இல்லை என சொல்லும் மேகி பிரியர்கள் ஏராளம் . மேலும் இது இது மலிவானது, செய்வதற்கு எளிதானது மற்றும் சுவையானது என்பதால் அதிகமானோரால் விருப்பப்படுகிறது. இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் விரும்பிகளால் அதிகம் தேர்வு செய்யப்படும் பிராண்ட்களில் முதன்மையானதாக உள்ளது.

நீங்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்தாலும் சரி, வேலைக்காக வெளியூரில் தங்கியிருந்தாலும் சரி மேகி நூடுல்ஸ் எப்போதும் உங்களுக்கு ஒரு சிறப்பான உணவாக கைகொடுக்கும். ஆனால் நாம் அனைவரும் மேகியை எவ்வளவு விரும்பினாலும், அது ஆரோக்கியமற்றதாகவே உள்ளது மற்றும் தினசரி அதை உட்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உங்கள் மேகியை ஆரோக்கியமான உணவாக மாற்ற சில ஊட்டச்சத்துக்களை எவ்வாறு சேர்க்கலாம் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்..

1. காய்கறிகளை சேருங்கள்:

அனைத்து வகையான சீசன் காய்கறிகளையும் சேர்த்து, மேகி நூடுல்ஸை ஆரோக்கியமானதாக மாற்றலாம்.

தேவையான பொருட்கள்:

மேகி – 2 பாக்கெட்டுகள்

மேகி மசாலா

வெண்ணெய்

வெங்காயம் – 1

குடைமிளகாய் – 1

பச்சை மிளகாய் – 4

பட்டாணி – தேவையான அளவு

கேரட் – பாதியளவு

தக்காளி – 1

கொத்துமல்லி இலைகள் – சிறிதளவு

மஞ்சள் – 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – ருசிக்கு ஏற்ப

செய்முறை:

குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட், பட்டாணி ஆகிய காய்கறிகளை உருகிய வெண்ணெய்யில் ஒன்றாக சேர்த்து வதக்கவும். அத்துடன் மிளகு, மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகள் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும், மேகி நூடுல்ஸ் மற்றும் அதிலுள்ள மசாலாவை சேர்க்கவும். இத்துடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை சேர்த்து பரிமாறவும். இது ஒரு சிறப்பான சிற்றுண்டியாக மட்டுமின்றி சமச்சீர் உணவாகவும் இப்போது மாறிவிட்டது.

மக்காச்சோளத்தில் இத்தனை வகை ஸ்நாக்ஸ் செய்யலாமா..! குழந்தைகள் விரும்பும் ரெசிபி

2. முட்டை மேகி:

முட்டையை விரும்புபவர்கள், நீங்கள் விரும்பும் எந்த வடிவத்திலும் முட்டைகளை மேகியில் சேர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டை – 2

உப்பு – ருசிக்கு ஏற்ப

கருப்பு மிளகு தூள் – 1 டீஸ்பூன்

மேகி – 2 பாக்கெட்டுகள்

செய்முறை

கொதிக்கும் தண்ணீரில் மேகியை போட்டு நன்றாக வேகவைக்கவும். கடாயில் இருந்து மேகியை வெளியே எடுப்பதற்கு முன்பு இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றவும். அத்துடன் சிறிதளவு மிளகு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இல்லை எனில், முதலில் முட்டையை வறுத்து, அதனை நன்றாக சமைக்கப்பட்ட மேகியுடன் கலந்து பின்னர் உப்பு, மிளகுதூள் சேர்த்து இறக்கலாம்.

3. மேகியுடன் சிக்கன்:

மேகி – 2 பாக்கெட்டுகள்

துண்டாக்கப்பட்ட வேகவைத்த கோழி இறைச்சி

வெங்காயம் – 1

குடைமிளகாய் – 1

மிளகு தூள் – தேவையான அளவு

உப்பு – ருசிக்கு ஏற்ப

எண்ணெய் – சிறிதளவு

செஸ்வான் சட்னி – சிறிதளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் காயவைத்து, அதில் காய்கறிகள் மற்றும் வேகவைக்கப்பட்ட கோழி இறைச்சியை வறுக்கவும். அத்துடன் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். நீங்கள் காரத்தை அதிகம் விரும்புபவர் என்றால், செஸ்வான் சட்னியை சிறிதளவு ஊற்றவும். இந்த கலவையில் வேகவைத்து குளிர்விக்கப்பட்ட மேகியை அத்துடன் சேருங்கள். இப்போது இந்த கலவையை நன்றாக கிளறி விட்டு, விருப்பம் போல் சிறிதளவு வெண்ணெய் உடன் பரிமாறுங்கள்.

வெஜ் பிரியர்கள் இந்த செய்முறையை நீங்கள் முயற்சிக்க ஆசைப்பட்டால், சிக்கனுக்கு பதிலாக பன்னீரைப் பயன்படுத்தலாம். இது சுவையான இரவு உணவுக்கு சூப்பரானது.

காய்கறிகள், கோழிக்கறி மற்றும் முட்டைகளை சேர்ப்பது உங்கள் மேகிக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும். இவை அனைத்தும் மேகியை ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்ததாக மாற்றும் மற்றும் உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் முழு தட்டையும் முழுசாக சாப்பிட்ட வைக்க உதவும்.

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com