how to preserve green chillies and prevent them from drying

Share

சமையலுக்கு வெங்காயம், தக்காளி எவ்வளவு முக்கியமானதோ? அதற்கு ஈடாக உள்ளது மிளகாய். இவை மூன்றும் சமையலறையில் இருந்தால் போதும், பெண்கள் ருசியாக குழம்பு வைத்துவிடுவார்கள். வெங்காயம், தக்காளியைக்கூட எளிதில் பாதுகாத்துவிடலாம். ஆனால் மிளகாயின் ஆயுள்காலம் சிறிது நாள்களுக்குத் தான் என்பதால் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும்.

பொதுவாக மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த காய்கறிகளை நாளைக்கு பிரிட்ஜில் எடுத்துவைக்கலாம் என்று நினைப்பதற்குள் அழுகி விடும் அல்லது காய்ந்துவிடும். இதனை எப்படி உலராமலும், அழுகி விடாமலும் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

ஜிப் – லாக் முறை: நீங்கள் வாங்கும் மிளகாய் நீண்ட நாள்களுக்குக்கூட பச்சையாக வைத்திருக்கவும், அழுகிவிடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க ஜிப் -லாக் முறை சிறந்ததாக உள்ளது.

இதைப்பின்பற்றுவதற்கு முன்னால் நீங்கள் பச்சை மிளகாயை கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் இருந்தால் உலர வைக்க வேண்டும். பின்னர் அதன் காம்பு பகுதியை நீக்கிவிட்டு ஜிப் – லாக் பைகளில் வைத்து பிரிட்ஜில் வைக்கலாம். இதனால் பச்சை மிளகாய் நீண்ட நாள்களுக்கு ரெம்ப ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.

குறிப்பாக பைகளை மூடுவதற்கு முன்னதாக, பைக்குள் காற்று இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எப்பொழுதெல்லாம் சமைப்பதற்கு மிளகாய் தேவைப்படுகிறதோ? எடுத்துவிட்டு மீண்டும் அதே முறையில் வைத்துவிட மறந்துவிடாதீர்கள். இவ்வாறு நீங்கள் மேற்கொண்டால் எப்போதும் மிளகாயை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கலாம்..

காற்று புகாத ஜாடி : அதிகளவிலான மிளகாயை வாங்கி வைக்கும் போது தான் அவசர வேலைக்காக வெளியூர்களுக்கு செல்ல நேரிடும். அப்படியே குளிர்சாதனப்பெட்டிகளில் வைத்து விட்டு சென்றாலும் வீணாகவிடும். எனவே முதலில் பச்சை மிளகாயின் காம்பு பகுதிகளை நீக்கிவிட்டு, சுத்தமான துணியில் சுற்றி காற்று புகாத டப்பா அல்லது ஜாடியில் அடைத்து வைக்க வேண்டும். பின்னர் பிரிட்ஜில் வைத்தால் 20-25 நாள்கள் கூட பச்சை மிளகாய் அப்படியே இருக்கும்.

இந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மறதிநோய் ஏற்படும் அபாயம் – அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்!

க்ளிங் ஃபிலிம் முறை ( அலுமினிய பாயில்):

பச்சை மிளகாயைப் பாதுகாப்பதற்கு மற்றொரு வழி அலுமினிய பாயிலை வைத்து பாதுகாப்பாக வைக்கும் முறை. வழக்கம் போல முதலில் மிளகாயை நன்றாக கழுவிக்கொள்ளவும். பின்னர் காம்புகளை நீக்கிவிட்டு ஈரப்பதம் இல்லாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.. ஒரு தட்டில் மிளகாயை வைத்து அதன் மீது அலுமினியம் ஃபாயிலை வைத்து மூடி வைக்க வேண்டும். பின்னர் அந்த தட்டை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் பல நாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

பச்சை மிளகாய் மோசமாவதைக்கண்டறிவது எப்படி?

மேற்கண்ட முறைகளை பின்பற்றி பச்சை மிளகாயை் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் கெட்டுப்போகிவிடும். எனவே பச்சை மிளகாய் நிறம் மாறத்தொடங்கி லேசான துர்நாற்றத்தை வீசத் தொடங்கியதும் அதை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லாடிவிடில் மீதமுள்ள பச்சை மிளகாய்களையும் பாதித்துவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com