நீங்கள் எந்த வெரைட்டியில் சிக்கனை சமைத்து சாப்பிட்டாலும், அதை எடுத்து உண்ணும்போது மிகவும் மிருதுவாக, ஜூசியாக இருந்தால் ரசித்து, சுவைத்து சாப்பிட ஏதுவாக இருக்கும். குறிப்பாக இத்தகைய சிக்கனை சாப்பிடும்போது நம் நாவில் எச்சில் சுரக்க தொடங்கி விடும்.
கார, சாரமான மசாலாவில் வேக வைக்கப்பட்ட சிக்கனை கொஞ்சம் கிரேவி சேர்த்து சாப்பிடும் சுகமே தனியானது. நீங்கள் என்னதான் டயட் கட்டுப்பாடு, உடல் எடை குறைக்கும் முயற்சி என்று கட்டுப்பாடுகளுடன் இருந்தாலும் அதெல்லாம் நொடியில் தவிடு பொடியாகிவிடும்.
எனினும், சிக்கன் சமைக்கும் எல்லோருக்கும் அதை மிருதுவாகவும், ஜூசியாகவும் சமைக்கும் நுட்பம் தெரிந்திருக்காது. ஆகவே, நீங்கள் சமைக்கும் சிக்கனை மிருதுவாக, சுவையானதாக மாற்றுவது எப்படி என்பது குறித்து சில குறிப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிக்கன் துண்டுகளை மெரினேட் செய்யவும்…
சிக்கனை நீங்கள் எந்த வெரைட்டியாக சமைத்தாலும், முதலில் அதை மெரினேட் செய்வது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் ஆகும். உங்கள் சிக்கனை ஜூசியாக மாற்றுவதற்கு இது உதவும். மெரினேட் செய்யும் போது சிக்கன் 3 முதல் 4 மணி நேரம் வரையிலும் ஊற வைத்திருப்பது முக்கியமாகும். கிரில் அல்லது தந்தூரி சிக்கன் செய்ய போகிறீர்கள் என்றால் இரவு முழுவதும் கூட மெரினேட் செய்து வைக்கலாம். மெரினேட் செய்வதற்கு தயிர் அல்லது மோர் பயன்படுத்தவும். அதில் உள்ள என்ஜைம்கள் சிக்கனில் உள்ள புரதம் உடைந்து, அதை மிருதுவாக மாற்றுவதற்கு உதவும்.
களிமண் கப்புகளில் டீ குடித்தால் இத்தனை நன்மைளா..? இன்னைக்கே டிரை பண்ணி பாத்துருங்க…
சிக்கனை அடித்து வைக்கவும்
இறைச்சியை அடித்து அதை மிருதுவாக மாற்றுவதற்கென தனி டூல்ஸ் இருக்கின்றன. அதை பயன்படுத்தி, நீங்கள் சமைக்க இருக்கும் சிக்கனை அடித்து வைக்கவும். கிரில்லிங் அல்லது ரோஸ்டிங் செய்ய இது உதவியாக இருக்கும்.

பாஸ்டிங்
நீங்கள் சமைக்கும்போது சிக்கன் மீது எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவும் முறைக்கு பெயர் பாஸ்டிங் ஆகும். இப்படி பாஸ்டிங் செய்வதால், சிக்கனில் உள்ள ஜூஸ் என்பது அனைத்து இடங்களுக்கும் பரவலாக சென்று சேரும். கிரில்லிங் அல்லது பேக்கிங் செய்கிறீர்கள் என்றால் ஒவ்வொரு 20 முதல் 30 நிமிடங்களில் எண்ணெய் விடுவது அவசியமாகும்.
மெதுவாக சமைக்கவும்
உங்கள் சமையலை நீங்கள் மெதுவாக செய்ய வேண்டும். தீ மிதமான அளவில் இருக்க வேண்டும். ஏனென்றால் மசாலாவில் உள்ள ஜூஸ் மற்றும் மனம் ஆகியவை சிக்கன் துண்டுகளில் ஊடுருவிச் செல்ல இது உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, லெக் பீஸ் மற்றும் இதர அடர்த்தியான இறைச்சி உள்ள இடங்களில் இது நன்றாக பரவி சுவையை அதிகரிக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.