பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த குற்றங்களுக்கு புகார் செய்ய…
தற்போது வரும் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள புகார் வகை, சம்பவம் நடந்த நேரம் மற்றும் இடம், மாநிலம், மாவட்டம், காவல் நிலையம், சம்பவம் எந்த வலைபக்கத்தில் நடந்தது? ஆகியவற்றை கட்டாயம் பதிவிட வேண்டும்.
மேலும் எந்த வலைப்பக்கத்தில் நடந்ததோ, அந்த வலைபக்கத்தின் லிங்க் மற்றும் சம்பவம் நடந்ததற்கான ஆவணம் ஆகியவற்றை சமர்பிக்கவும்.
சம்பவத்தை பற்றிய கூடுதல் விவரங்களை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் குறிப்பிடவும்.
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நிரப்பியவுடன் ‘Save and Next’-ஐ கிளிக் செய்யவும்.
அடுத்து வரும் ‘Suspect Details’-ல் குற்றம் சாட்டப்பட்டவர் குறித்து குறிப்பிட்டு ‘Save and Next’ கொடுத்து வரும் Preview-ஐ பார்த்து captcha-வை போட்டு சமர்பித்து விடவும்.
அப்போது உங்கள் புகார் பதிவாகிவிடும்.

நிதி மற்றும் மற்ற குற்றங்களுக்கு புகார் செய்ய…
‘New User’ என்று பதிவு செய்து, உங்கள் பெயர், ஊர், போன் நம்பர் ஆகியவற்றை கொடுத்து ரெஜிஸ்டர் செய்துக்கொள்ளவும்.
மற்றப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுகள் புகார் செய்ய என்ன வழிமுறையோ, அதே வழிமுறை தான்.
‘புகார் செய்துவிட்டோம்…நடவடிக்கை எடுத்துவிட்டார்களா?’ என்பதை தெரிந்துக்கொள்ள, அதே வலைதளத்தில் உள்ள ‘Track your Complaint’ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளலாம். அதில், நீங்கள் புகார் செய்தப்போது கொடுத்த ‘Acknowledgement no’-ஐ பதிவிட்டு தெரிந்துக்கொள்ளலாம்.