ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. எப்படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பதை பார்க்கலாம்.
* முதலில் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில், Tangedco என்று தேடினால் வரும் பக்கத்தை திறந்து கொள்ளவும்.
* திறக்கும் முதல் பக்கத்திலேயே, Link your service connection with Aadhar என்று இருக்கும் பகுதியை க்ளிக் செய்து கொள்ளவும்.
* அதன் பிறகு திறக்கும் பக்கத்தில், சில தகவல்கள் (information) கொடுக்கப்பட்டிருக்கும். அதனை படித்துக் கொள்ளவும். பின்னர் அதே பக்கத்தில், Service Connection Number கேட்கப்படும்; அதில் உங்களுடைய மின் இணைப்பு எண் ( E.B. consumer number) பதிவிடவும்.