How to: படிக்கும் நேரத்தில் தூக்கத்தை தவிர்ப்பது எப்படி? | How to avoid daytime sleepiness

Share

6. வசதியாக இருக்காதீர்கள்

படிக்கும் போது தூக்கம் வருவதற்கு ஒரு முக்கியக் காரணம், மிகவும் வசதியாக இருப்பது. உங்கள் படுக்கையில் அமர்ந்து படிக்காமல் இருப்பதே இதற்கான முதல் படி. படிக்கும் இடம் மற்றும் தூங்கும் இடம் ஆகியவற்றை தனித்தனியாக வைத்திருங்கள். இதனால் உங்கள் மூளை இரண்டையும் தெளிவாக வேறுபடுத்திக்கொள்ளும்.

உங்கள் முதுகை நேராக வைத்து ஒரு மேசை மற்றும் நாற்காலியில் உட்காருவது நல்லது. படிக்கும் போது விழித்திருக்கவும், கவனம் செலுத்தவும் பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்தவும்.

7. மேலும் செய்ய வேண்டியவை…

* அடிக்கடி முகம் கழுவுங்கள், இது உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

* உங்களுடன் நீங்களே பேசுங்கள். தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளுடன் உங்களுடன் நீங்களே பேசுங்கள்.

* கணினியில் படிக்கிறீர்கள் என்றால் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையில் இருந்து கண்ணை எடுத்து சுவரில் பார்க்கவும்.

* படிக்கும்போது உங்களுக்கு தூக்கம் வரும் நேரம், ஒரு சூயிங்கத்தை வாயில் போட்டுக்கொள்ளவும்.

* தனியாகப் படிப்பதை தவிர்த்து, குழுவாகப் படிப்பதும் பலனை தரும்.

* படிக்கும்போது இடையிடையே இசை கேட்பது தூக்கத்தை தள்ளிவைக்கும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com