How to: கேச வளர்ச்சியை பராமரிப்பது எப்படி? I How to maintain Hair Growth? I How to maintain Hair Growth?

Share

நல்ல தரமான கேச பிரஷ்களை பயன்படுத்துவது கேச பராமரிப்பில் மிக முக்கியப் பகுதியாகும். கேசத்தின் ஆரம்பப் பகுதியில் ஆரம்பித்து நுனி பகுதி வரை மென்மையான பிரெஷ்களை கொண்டு சீவ வேண்டும். மேலும், ரத்த ஓட்டத்தை தூண்டும் வகையில் ஸ்கால்ப்பில் சீப்பை கொண்டு மிருதுவாக சீவுவதை வழக்கமாக்கவும். முடிந்தவரை கேசத்தினை சிக்கு விழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இதனால் கேசம் பாதிப்படையாமல் தடுக்கப்படும்.

வழக்கமாக கேசத்திற்குச் செய்யும் ஷாம்பூ, எண்ணெய், மற்றும் கண்டிஷனர் பராமரிப்புடன் கூடுதலாக சில விஷயங்களைச் செய்வது கேசத்தின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவும். 4 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதை உச்சந்தலையில் மசாஜ் செய்து, பின் கேசத்தின் நுனி வரை தடவவும். 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிக்கவும். இதில் வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால் கேசம் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். மேலும் கேசம் பலம் ஆகும்; உதிர்வதும் குறையும். இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து வரலாம்.

கேசப் பராமரிப்பு என்றாலும், உடல் ஆரோக்கியம் என்றாலும் அதற்கு மிக முக்கியத் தேவை ஊட்டச்சத்துடன் கூடிய உணவாகும். ஒமேகா -3 அமிலங்கள், வைட்டமின் பி 7, அதாவது பயோட்டின், புரதம் மற்றும் ஃபோலிக் அமிலம் கொண்ட உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும். மேலும் உணவில் முட்டை, கீரை, காய்கறிகள், இறைச்சி மற்றும் நட்ஸ் ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். கூடவே, தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் யோகா, உடற்பயிற்சி என மேற்கொள்ளலாம். நீங்கள் எதிர்பார்ப்பதை போன்று கேச வளர்ச்சி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com