How To: குறுகிய நேரத்தில் வீட்டை சுத்தம் செய்வது எப்படி? | How to clean the house in a short time?

Share

வீட்டை பொறுத்தவரை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும், தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். அதுவும் தற்போது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பணி, படிப்பு என்று சென்றுவிட, கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையும் வீட்டினை சுத்தம் செய்வதிலேயே போய்விடுகிறது பலருக்கு. அதை தவிர்த்து மிகக் குறுகிய நேரத்திலேயே வீட்டை சுத்தம் செய்து முடிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்…

* முதலில் சுத்தம் செய்வதற்குத் தேவையான துடைப்பம், கிருமிநாசினி திரவம், ஒட்டடை அடிக்கும் குச்சி, Micro fibre துணி போன்ற அனைத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* தனியாக சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டாம். எப்போது சுத்தம் செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, ஆளுக்கு ஒரு பணியாக, வேலைகளைப் பிரித்துக்கொண்டு செய்யவும்.

* வேலையைத் துவங்கும் முன்பு, எது தேவையான பொருள்கள், எவையெல்லாம் தேவையில்லாத பொருள்கள் என்று பிரித்து, மறு யோசனையே இல்லாமல் அவற்றை அப்புறப்படுத்தவும்.

* மொபைல், டிவியில் பாடல் ப்ளே செய்து அதை கேட்டபடியே சுத்தம் செய்யும் வேலையைப் பார்க்கலாம். ஆனால், மொபைலை கையில் எடுத்து வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என்று பார்க்க ஆரம்பித்தால் மீண்டும் அதை கீழே வைப்பதற்கு எத்தனை நிமிடங்கள் ஆகும் என்பது உங்கள் கன்ட்ரோலில் இருக்காது. எனவே அதை தவிர்க்கவும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com