Here is a recipe list of India’s special chutneys that can be made in minutes

Share

இந்திய உணவுகளில் பெரும்பாலும் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவைத் தான் இடம் பெறும். வீட்டில் உள்ள பெண்களோ சீக்கிரம் சமைத்து விட வேண்டும் என்பதற்காகத் தக்காளி மற்றும் தேங்காய் சட்னியைத் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் இதனையேத் தொடர்ந்து சாப்பிட்டாலும் நிச்சயம் சளிப்பாகிவிடும். எனவே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பேமஸாக உள்ள சட்னிகளை சில நிமிடங்களில் எப்படி தயார் செய்வது பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.

பூண்டு சட்னி :

மேற்கு இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் விரும்பிச்சாப்பிடும் சட்னி வகைகளில் ஒன்றாக உள்ளது.

தேவையான பொருள்கள்:

முழுப்பூண்டு – 1

காய்ந்த மிளகாய் – 4

சீரகம் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

கடுகு எண்ணெ் – 4 டீஸ்பூன்

உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை:

முதலில் உறித்த பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகாய் தூள், 4-5 தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்ந்து மிக்ஸியில் கெட்டியான பேஸ்ட் வரும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வானலில், கடுகு எண்ணெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை போட்டு சட்னி விழுதைச் சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை வாசனை போகும் வரை, மிதமான தீயில் வைக்க வேண்டும். இப்போது பூண்டு சட்னி தயாராகிவிட்டது.

இந்த 5 உணவுகளை மட்டும் இரவில் தவறி கூட சாப்பிடாதீங்க…

கொத்தமல்லி புதினா சட்னி:

வட இந்தியா ஸ்பெஷல் கொத்தமல்லி புதினா சட்னி செய்ய தேவையான பொருள்கள்:

கொத்தமல்லி இலைகள் – 2 கப்

புதினா இலைகள் – ¼ கப்

பச்சை மிளகாய் -1

இஞ்சி – சிறிதளவு

பூண்டு – 4 பல்

வெங்காயம் – 1

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை:

முதலில் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலைகளை நன்கு சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, கிராம்பு, வெங்காயம், பூண்டு, எலுமிச்சைச்சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்ந்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைபட்டால் தாளித்து வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால்,  கொத்தமல்லி புதினா சட்னியை பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு வாரத்திற்கு கூட நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா..? 

தேங்காய் சட்னி:

தென் இந்திய மக்கள் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஸ்பெஷல் சட்னியாக உள்ளது தேங்காய் சட்னி.

தேவையான பொருள்கள்:

½ கப் தேங்காய் தூள் அல்லது தேங்காய்

¼ கப் வறுத்த வேர்க்கடலை

¼ கப் வறுத்த சுண்டல்

½ கப் தயிர்

இஞ்சி சிறிதளவு

பச்சை மிளகாய்

கடுகு- 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 1

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு சுவைக்கு ஏற்ப

செய்முறை:

வறுத்த வேர்க்கடலை மற்றும் வறுத்த சுண்டலை தோலை நீக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் தேங்காய் தூள், தயிர், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியான பேஸ்ட் வரும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் 2  டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து கொண்டு சட்னியை தாளித்து சுவையாக பரிமாறலாம்.

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பது தவறு : ஏன் தெரியுமா..?

கடுகு சட்னி:

கிழக்கு இந்தியாவில் ஸ்பெஷலான கடுகு சட்னி செய்ய தேவையான பொருள்கள்:

கருப்பு கடுகு – ¼ கப்

மஞ்சள் கடுகு – ¼ கப்

மிளகு – ½ தேக்கரண்டி

வெந்தயம் – ½ டீஸ்பூன்

மாம்பழம்,இஞ்சி, பச்சை மிளகாய், டீஸ்பூன் மஞ்சள், சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சர்க்கரை வினிகர், 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய்..

செய்முறை:

மாம்பழங்களைத் தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். மஞ்சள் கடுகு, கருப்பு கடுகு, மிளகு மற்றும் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து நறுக்கிய மாம்பழம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இறுதியில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சர்க்கரை, வினிகர் மற்றும் உப்பு சேர்க்கவும்.

பின்னர் தண்ணீரை சேர்த்து மென்மையான பேஸ்ட் போன்று கலக்கி கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெயை சூடாக்கி, அரைத்த சட்னி பேஸ்ட்டை சேர்த்துக் கலக்கி கொள்ள வேண்டும். பின்னர் நல்ல பாத்திரத்தில் சட்னி எடுத்து வைத்து பராமரித்தால் ஒரு மாதகாலம் வரை நாம் பயன்படுத்தலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com