Healthy Sandwich: கீரை முதல் பேரீச்சை வரை.. எல்லோருக்கும் பிடித்த சுவையான சாண்ட்விச்!

Share

கீரை கார்ன் சாண்ட்விச்

கீரை கார்ன் சாண்ட்விச்
கீரை கார்ன் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 2, ஏதாவது ஒரு கீரை – ஒரு கப், வேகவைக்கப்பட்ட மக்காச்சோள முத்துக்கள் – ஒரு கப், மிளகுத் தூள் – அரை டீஸ்பூன், சீரகத் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். பிரெட்டின் மீது கீரை, மக்காச்சோளம், மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் தூவி, அதன் மேல் பிரெட் வைத்து டோஸ்ட் செய்யவேண்டும்.

டியூனா ஃபிஷ் சாண்ட்விச்

டியூனா ஃபிஷ் சாண்ட்விச்
டியூனா ஃபிஷ் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் – 2 ஸ்லைஸ், புதினா சட்னி – அரை கப், நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி – ஒரு கப், வேகவைத்த டியூனா ஃபிஷ் – அரை கப்.

செய்முறை: பிரெட்டில் புதினா சட்னி தடவி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, டியூனா ஃபிஷ் தூவி டோஸ்ட் செய்து பரிமாறவும்.

பிட்டா – சிக்கன் சாண்ட்விச்

பிட்டா - சிக்கன் சாண்ட்விச்
பிட்டா – சிக்கன் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் – 2, இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன், வேகவைத்த சிக்கன் – 1 கப், சோம்பு – 1/2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி – தலா 1, சீரகத் தூள், மிளகுத்தூள் – தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கி, இதில் மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்த் தூள், உப்பு, சிக்கன் துண்டுகள், மிளகுத் தூள் சேர்த்துக் கிளறி, இறுதியாக கொத்தமல்லி் தூவி இறக்கவும். இதை  பிரெட்டின் இடையில் வைத்து சாப்பிடலாம்.

கேரட் – சீஸ் சாண்ட்விச்

கேரட் - சீஸ் சாண்ட்விச்
கேரட் – சீஸ் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 2, கேரட் – ஒன்று, சாண்ட்விச் சீஸ் – ஒன்று, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: பிரெட்டின் மேல் சீஸ் வைத்து, அதன் மேல் மெலிதாக அரிந்த கேரட் அல்லது துருவிய கேரட்டை  வைத்து, டோஸ்ட் செய்யவும்.

பேரீச்சை சாண்ட்விச்

பேரீச்சை சாண்ட்விச்
பேரீச்சை சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் – 2 ஸ்லைஸ், பேரீச்சை – 6, பாதாம் – 4, வாழைப்பழம் – 4 ஸ்லைஸ்.

செய்முறை: பிரெட்டை டோஸ்ட் செய்து நடுவில் வாழைப்பழ ஸ்லைஸ், துண்டாக நறுக்கிய பேரீச்சை, பாதாம் ஆகியவற்றை நடுவில் வைத்து மூடி டோஸ்ட் செய்ய வேண்டும்.

தேன் சாண்ட்விச்

தேன் சாண்ட்விச்
தேன் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் – 2 ஸ்லைஸ், தேன் – ஒரு கப், பனை சர்க்கரை – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பிரெட்டின் மேல் தேனை ஊற்றி, அதன் மேல் பனை சர்க்கரை தூவி, அப்படியே டோஸ்ட் செய்து பரிமாறவும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com