அதே சமயம், நம் வயிற்றுக்கு ஏதேனும் கொடுக்க வேண்டுமல்லவா? அந்த ஸ்நாக்ஸ் சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதற்கான 3 ஸ்நாக்ஸ் வகைகள் இதோ.
ஓட்ஸ் இட்லி
ஒரு கப் ரோல்டு ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும்
¼ கப் அளவு உளுந்து எடுத்துக் கொள்ளவும்
2 டேபிள் ஸ்பூன் தயிர் தேவை
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுது சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப எடுக்கவும்
பேக்கிங் சோடா சிறிதளவு
½ டீஸ்பூன் எண்ணெய்

செய்முறை
ஓட்ஸ் மற்றும் உளுந்து ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து பவுடராக எடுத்துக் கொள்ளவும்.இதனுடன் ஒரு கப் தண்ணீர், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து கலக்கவும். ஒரு மணி நேரம் ஊற வைத்த பிறகு மீண்டும் பேக்கிங் சோடா, எண்ணெய் சேர்த்து பிசையவும். இதனை இட்லி போல தட்டி எடுத்துக் கொள்ளவும். இட்லி பாத்திரம் வைத்து, ஆவியில் வேக வைக்கவும். சூடான ஓட்ஸ் இட்லிக்கு துணையாக சட்னி அல்லது சாம்பார் சேர்த்து சாப்பிடலாம்.
Read More : மக்காச்சோளத்தில் இந்த மாதிரிலாம் கூட செய்ய முடியுமா..? நியூ ரெசிபீஸ் இதோ..
நிலக்கடலை பட்டர், வாழைப்பழம் ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
பசும்பால் ஒரு கப் அளவு
லேசாக பழுத்த வாழைப்பழத்தை துண்டு, துண்டாக நறுக்கவும்
2 டேபிள்ஸ்பூன் நிலக்கடலை பட்டர்
ஒரு சிட்டிகை அளவு இலவங்கப்பட்டை தூள்
ஐஸ் கட்டிகள் தேவையான அளவு

செய்முறை
வாழைப்பழத்தை ஃபிரிட்ஜில் வைத்து கூலிங் நிலையில் எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய வாழைப்பழ துண்டுகள், பால், நிலக்கடலை பட்டர், லவங்கத்தூள், ஐஸ் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடிக்கவும். எவ்வளவு இலகுவாக வேண்டுமோ, அந்த அளவுக்கு அடித்து வைக்கவும். இப்போது சுவையான ஸ்மூத்தி ரெடி
சுண்டல் சோயா கட்லெட்
தேவையான பொருட்கள்:
அரை கப் சுண்டல் எடுத்து ஊற வைத்து, வேகவிடவும்.
அரை கப் அளவு சோயா துகள்களை எடுத்துக் கொள்ளவும்.
புதினா இலை – இரண்டு கொத்து
பச்சை மிளகாய் – 2 அல்லது 3
இஞ்சித்துண்டு சிறிதளவு
¾ டேபிள்ஸ்பூன் அளவு சில்லி பவுடர்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை அளவு
அரை எலுமிச்சை பழம்
உப்பு தேவையான அளவு
இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் எண்ணெய்

செய்முறை
சூடான நீரில் சோயா துகள்களை 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் வடிகட்டி எடுத்து வைக்கவும். இதனுடன் சுண்டல், புதினா, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசையவும். இந்த விழுதை ரவுண்டாக அல்லது சதுரமாக பிடித்து வைக்கவும். சூடான எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான ஸ்நாக்ஸ் தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.