1. உலகிலேயே அதிக வருடங்கள் கெடாமல் இருக்கிற பொருள் தேன் மட்டுமே… ஏறக்குறைய நான்காயிரம் வருடங்களுக்கு முந்தைய பிரமிடுகளில் கண்டெடுக்கப்பெற்ற தேன்கூட கெடாமல் இருந்திருக்கிறது.
2. ஐரோப்பியர்கள் நம்மைவிட தேன் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, இங்கிலாந்து மக்கள். அவர்கள் இந்தியாவை ஆண்டபோது, வருடம் முழுக்க பூக்கும் Antigonon கொடியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து வளர்த்தார்கள். அந்தக் கொடிகள் இப்போதும் நம்மூர் தெருவோரங்களில் இதய வடிவில், பிங்க் நிறத்தில் சரம் சரமாகப் பூத்துக் கொண்டிருக்கின்றன.
3. மலைத்தேன், கொம்புத்தேன், பொந்து தேன், புற்றுத்தேன் எனப் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில்,
மரப்பொந்திலிருந்து எடுப்பதுதான் சிறப்பான தேன். இதை கொசுவந்தேன் என்பார்கள். இந்தத் தேன்கூட்டைக் கட்டும் தேனீக்கள் மிகச்சிறியவையாக இருப்பதால் இந்தப் பெயர்.
4. உட்கொண்ட 96 நிமிடங்களில் தேன் உடம்புடன் கலந்துவிடும். நோயாளிகளின் உடலில் சித்த மருந்துகள் சீக்கிரம் உட்கிரகிக்கப்பட வேண்டுமென்றால், அதை தேனுடன் கலந்து தர வேண்டும்.


5. வெந்நீரில் தேன் கலந்து அருந்தினால், உடல் எடை குறையும் என்கிறார்கள். குறைந்தபட்சமாக 50 மில்லி தேனுடன் 200 மில்லி வெந்நீர் கலந்து குடித்து வந்தால் மட்டுமே உடல் எடை படிப்படியாகக் குறையும். கூடவே உணவுக் கட்டுப்பாடும் முக்கியம்.
6. தலா 30 மில்லி தேனும், எலுமிச்சைச்சாறும் கலந்து, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவ்வப்போது கொடுத்து வந்தால், சளி இளகி வெளியேறும்.