healing properties to keeping evil spirits away know interesting facts about garlic

Share

உலகெங்கிலும் பல வகையான உணவு சமையலில் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளின் உணவில் பூண்டு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டு மிகுந்த வாசம் கொண்டது. சமையலில் சுவைக்கான மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பச்சையாக எடுத்துக் கொண்டால் நாற்றம் அடிக்கும்.

பூண்டு காய்கறி பிரிவில் வருகிறதா அல்லது மசாலா பிரிவில் வருகிறதா என்று பெரும் விவாதமே நடைபெற்று வந்தது. இறுதியாக பூண்டு மசாலா பொருள் அல்ல, அது காய்கறி தான் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் முனைவர் நவீத் சபீர் இதுகுறித்து கூறுகையில், பூண்டு காய்கறி என முடிவு செய்யப்பட்டாலும், அதை மசாலா பொருளாகக் கருதி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஏனென்றால் வெறுமனே பூண்டை மட்டும் வைத்து கூட்டு, பொறியல் எதுவும் செய்ய இயலாது என்பதால், அதை மசாலா பொருளாகக் கருதுகின்றனர்.

பூண்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம்

பல நாடுகளின் சமையல் அறைகளில் அத்தியாவசியப் பொருளாக பூண்டு இருக்கிறது. மற்றொரு புறம், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. உலகில் பூண்டு உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் நிலவும் நம்பிக்கையின்படி பூண்டு என்பது ‘சாமுத்ரா மந்தன்’ என்னும் நிகழ்வில் மூலமாக தொடக்கத்திற்கு வந்தது என்று கருதப்படுகிறது. அதாவது, ராகு மற்றும் கேது ஆகியோரை விஷ்ணு சிரச்சேதம் செய்ததைத் தொடர்ந்து, அவர்களது ரத்தத்தின் சிறு துளிகள் பூமியில் விழுந்ததாகவும், அதில் இருந்து பூண்டு மற்றும் வெங்காயம் விளைந்ததாகவும் கருதப்படுகிறது.

எகிப்தில் தோன்றியது

எகிப்தில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டு தோன்றியதாக ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றான்ர். உயிரிழந்த உடலை பதப்படுத்துவதற்காக எகிப்தில் பூண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மேட்டர் தெரிஞ்சா பாதாம் தோலை இனிமேல் தூக்கி போடவே மாட்டீங்க..!

ஆயுர்வேத மருத்துவத்தில் பூண்டு

ஆயுர்வேத மருத்துவம் தொடர்பாக 700 – 800 பிசி காலகட்டத்தில் எழுதப்பட்ட, பழம்பெரும் புத்தகமான சரக் சம்ஹிதாவில் பூண்டின் நற்பலன்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதாவது, வயிற்றுப் புழுக்கள், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூண்டு இயற்கையாகவே சூடு கொண்டது என்பதால் கோடை காலத்தில் இதை குறைவாக உட்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதம் மருத்துவம் பரிந்துரை செய்கிறது.

பச்சை பூண்டு நாற்றமடிப்பது ஏன்

பச்சை பூண்டு சற்று நாற்றம் கொண்டதாகவும், அதன் சுவை சற்று காரம் கொண்டதாகவும் இருப்பதற்கு அதில் உள்ள சல்ஃபர் சத்து தான் காரணம். இயற்கையாகவே ரத்தத்தை மெலிதாக்கும் குணம் பூண்டில் இருக்கிறது. அதனால், தான் ஆயுர்வேதத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அசைவ உணவுகளில் கொழுப்பை கரைக்க, அதனுடன் பூண்டு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ரோமானியா நாட்டில் பேய் மற்றும் தீய சக்திகளிடம் இருந்து பூண்டு பாதுகாப்பு தருவதாக நம்பப்படுகிறது.

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com