hardik pandya is next dhoni and will become captain soon says harbajan singh | ஹர்திக் பாண்டியாதான் அடுத்த தோனி, விரைவில் கேப்டனாவார்

Share

ஹர்திக் பாண்டியா கேப்டனாக வர வேண்டும். அவர்தான் அடுத்த கேப்டன் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அவர்தான் அடுத்த தோனி என்று முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமாரும், ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக காயத்திலிருந்து மீண்டிருக்கும் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் அனல் பறந்தது, பந்துகள் எகிறின. 4 ஓவர்கள் வீசிய அவர் 21 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருக்கட்டத்தில் 97/5 என்று இந்திய அணிக்கு ஆட்டம் நெருக்கடியான நிலைக்கு செல்ல பாண்டியாவின் இன்னிங்ஸ் அணியை வெற்றிப்பெற செய்தது. பேட்டிங்கில் அவர் 17 பந்துகளில் 33 ரன்களை விளாசினார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “ஹர்திக் பாண்டியா கேப்டனாக வர வேண்டும். அவர்தான் அடுத்த கேப்டன் என்று நான் கருதுகிறேன்.. தோனி மாதிரியான வீரராக பாண்டியா மாறிவிட்டார். அவர் மிக அமைதியாகவும் இருக்கிறார். நன்றாக பேட்டிங்கும் செய்கிறார்.

இதையும் படிக்க: தோனியை ‘டக்’அவுட் செய்த ஹாங்காங் ஸ்பின்னர்: கோபத்தில் இருக்கையை கிழித்த சிறுவன்- ஒரு நினைவோடை

மிகவும் கடினமாக உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவர் இந்தியாவின் கேப்டனாவதை நான் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போதும், ஐபிஎல் போட்டியின்போதும் அவர் தனது குணாம்சத்தை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. இந்திய அணியின் கேப்டனாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளையும், திறன்களையும் அவர் பெற்றிருக்கிறார்” என கூறியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com