பிரஷ் செய்வதற்கு முன்பாக காபி, டீ, உணவு என சாப்பிட்டால் பற்களில் கறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, பிரஷ் செய்வதற்கு முன்பாக பெட் காபி அருந்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
சிலருக்கு காலையில் வெறும் வயிற்றில் மாத்திரை போட வேண்டியதிருக்கும், அவர்கள் காலையில் எழுந்ததும் பிரஷ் செய்துவிட்டு மாத்திரை போடுவது நல்லது. இல்லையென்றால் வாயில் தேங்கியிருக்கும் எச்சில் மாத்திரை விழுங்கும்போது தண்ணீருடன் சேர்ந்து வயிற்றுக்குள் செல்லும். இதனால் வாய் துர்நாற்றம், பற்களில் கறை, எரிச்சலுணர்வு போன்றவை ஏற்படும். பிரஷ் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து தண்ணீர் அருந்திவிட்டு அதற்குப் பிறகு மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கலாம்.