பல் பிரச்னைக்கு வேறு இடத்தில் வலியை உணர்வது ஏன்?
சில நேரங்களில் பற்களில் பிரச்னை இருந்தால் காது வலி, கழுத்து வலி, தோள்பட்டை தலைவலி, கீழ்த்தாடை வலி உள்ளிட்டவை ஏற்படலாம். இதை மருத்துவச் சொற்களில் referred pain என்பார்கள். தலைப்பகுதியிலிருந்து வரும் நரம்புகள், வாய்ப்பகுதி வழியாகவும் தண்டுவடத்துக்குச் செல்கின்றன. இதனால் பல்லில் வலி ஏற்பட்டால் அங்கிருக்கும் நரம்புகள் செல்லும் இடங்களிலும் வலியை உணர்வார்கள். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் வாய்ப்பகுதியில் ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.
பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.