Gukesh; Super United Rapid and Blitz; நடப்பு உலக செஸ் சாம்பியன் குகேஷ், சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் தொடரில் ரேபிட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

Share

6-வது சுற்றிலும் வெற்றி பெற்ற குகேஷ், முதல் சுற்றில் அடைந்த தோல்விக்குப் பிறகு தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவுசெய்தார்.

பின்னர், 7, 8 ஆகிய சுற்றுகளில் டிரா கண்ட குகேஷ் கடைசி சுற்றில் வெற்றிபெற்றால் சாம்பியன் என்ற சவாலான நிலைக்குச் சென்றார்.

இந்த நிலையில்தான், நேற்று (ஜூலை 4) தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோவையும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் (Super United Rapid and Blitz)

சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் (Super United Rapid and Blitz)

இந்தத் தொடரில், முதல் சுற்றுக்குப் பிறகு தோல்வியே காணாத குகேஷ் 6 வெற்றி, 2 டிரா என மொத்தமாக 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

இதே பிரிவில் விளையாடிய மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி உள்பட 7 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று நான்காம் இடம் பிடித்தார்.

மேலும் மேக்னஸ் கார்ல்சன், குகேஷிடம் அடைந்த ஒரு தோல்வி உள்பட இரண்டு வெற்றி, 6 டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று மூன்றாம் பிடித்தார்.

முன்னதாக, நார்வே செஸ் தொடரில் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றதற்கும், குகேஷ் மூன்றாம் இடம்பிடித்ததற்கும் வெறும் 1.5 புள்ளிகள் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com