நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், உலக செஸ் சாம்பியன் குகேஸ், மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், முதல் நாளில் கார்ல்சன், குகேஷ் நேருக்குநேர் மோதிய முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றிபெற்றார்.
அதைத்தொடர்ந்து, ஜூன் 1-ம் தேதி இருவருக்குமிடையே நடைபெற்ற ஆறாவது சுற்றில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார்.
குகேஷிடம் முதல்முறையாகத் தோற்ற விரக்தியில் செஸ் டேபிளில் கார்ல்சன் கையால் குத்திய சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், இத்தொடரின் இறுதிச்சுற்றுகள் நேற்று நடைபெற்றன.
இதில், குகேஷ் தனது இறுதிச்சுற்றில் 2018-ம் ஆண்டு நார்வே செஸ் தொடர் சாம்பியன் ஃபேபியானோ கருவானாவை எதிர்கொண்டார்.
மறுபக்கம், கார்ல்சன் தனது இறுதிச்சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்டார்.