Good Night Review: குறட்டைப் பிரச்னை உண்மையிலேயே பெரும் பிரச்னையா? கலகலப்பூட்டும் காமெடி டிராமா! | Good Night Movie Review: A feel good romantic comedy ride that entertains till the end

Share

ஐ.டி துறையில் பணிபுரியும் நடுத்தர இளைஞன் மோகனுக்கு அம்மா, அக்கா, தங்கை, அக்கா கணவர் என நிறைவான குடும்பம். ஆனால், ‘மோட்டார்’ மோகன் என கலாய்க்கும் அளவுக்கு குறட்டை பிரச்னை அவரை படாதபாடு படுத்துகிறது. ஒருகட்டத்தில் கைகூடப்போகும் காதல்கூட இதனால் நிராகரிக்கப்படுகிறது. இப்படியான சூழலில், ஒரு நாள் வாட்டர் ஃபில்டர் சர்விஸ்மேனான அக்கா கணவர் ரமேஷ் திலக்கிற்கு உதவிசெய்ய உடன் செல்லும் மோகன் அங்கு அனுவை (மீதா ரகுநாத்) சந்திக்கிறார். காமெடியாகத் தொடங்கும் அந்தச் சந்திப்பு காதல், திருமணம் என மோகன் வாழ்க்கையில் அதுவரை இல்லாத மகிழ்ச்சியை கொண்டுவருகிறது.

குறட்டை பிரச்னை மீண்டும் என்ட்ரி கொடுத்து அனைத்தையும் புரட்டிபோட, மோகன் எப்படி அவை அனைத்திலிருந்தும் மீள்கிறார் என்பதை ஃபீல் குட் படமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகர். அதில் பெருமளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com