டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் மீரட்டை நோக்கி வரும் வழியில் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. சுமார் 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உவைசியின் காரை நோக்கி, மர்ம நபர்கள் 4 முறை சுட்டுள்ளனர். இதில் கார் டயர்கள் பஞ்சர் ஆகியுள்ளன. இருப்பினும் வெளியே வராத உவைசி, பஞ்சரான காருடன் பயணித்து உயிர் தப்பியுள்ளார்.
कुछ देर पहले छिजारसी टोल गेट पर मेरी गाड़ी पर गोलियाँ चलाई गयी। 4 राउंड फ़ायर हुए। 3-4 लोग थे, सब के सब भाग गए और हथियार वहीं छोड़ गए। मेरी गाड़ी पंक्चर हो गयी, लेकिन मैं दूसरी गाड़ी में बैठ कर वहाँ से निकल गया। हम सब महफ़ूज़ हैं। अलहमदु’लिलाह। pic.twitter.com/Q55qJbYRih
— Asaduddin Owaisi (@asadowaisi) February 3, 2022
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உவைசி, ‘தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்னை பின் தொடர்ந்து வருவதாக எனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்திருக்கிறார்கள். என் மீதான கொலை முயற்சி குறித்து தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் இந்த விசாரணையை நடத்தி குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க – புஷ்பா பட ஸ்டைலில் செம்மரக்கட்டைகள் கடத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல்கட்டமாக வரும் 10-ம்தேதி வாக்குப்பதிவு தொடங்குகின்றன. இதில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அசாதுதீன் உவைசி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். நாடு முழுவதும் அறியப்பட்ட கட்சியின் தலைவர், மக்களவை உறுப்பினர் என விஐபிகளில் ஒருவராக இருக்கும் அசாதுதீன் உவைசியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க – பிரதமர் மோடி ராணுவ சீருடையை அணிந்தது சட்டப்படி குற்றம்’ – உ.பி நீதிமன்றம் நோட்டீஸ்
சிசிடிவி காட்சிகள் உதவியோடு போலீசார் 2 பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் கைது செய்யப்பட்ட ஒருவர் காஜியாபாத்தை சேர்ந்த சுபம் என்பது தெரியவந்துள்ளது. உவைசி மீதான தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியிடப்படவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.