ஆட்டத்தை மாற்றிய எம்பாப்பே!
பின்னர், 80வது நிமிடத்தில் ஒரு கோல் மற்றும் அடுத்த 92 செகண்டில் அடுத்த கோல் என அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தார் எம்பாப்பே. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது ஆட்டம். அதன் பின் எக்ஸ்ட்ரா நேரம் வழங்கப்பட்டது.
அர்ஜெண்டினாவிற்கு சாதகமாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தை எம்பாப்பே அப்படியே மாற்றினார். 2 கோல்களை அடுத்தடுத்து அடித்து போட்டியை சமமாக்கினார். போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. அதிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. மெஸ்ஸி ஒரு கோல் எம்பாப்பே ஒரு கோல் அடிக்க போட்டி மீண்டும் டை ஆனது.
இதனால் பெனால்டி சூட் அவுட்டுக்கு ஆட்டம் சென்றது. அதில் அர்ஜெண்டினா 4-2 என வென்றது. இதன் மூலம் 1978, 1986 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது.